Tuesday, July 31, 2007

இரண்டுக்கு மேலே போனால்


ஏதோ இரண்டு குழந்தைக்கு மேலே போனால் -குடும்ப கட்டுபாடு என்ற மாதிரி தொடங்குதுனு என நினைக்கிறிங்களா?. ஒரு விசயம் இரண்டு பேருக்கு மேலே போனால் என்ன ஆகும் என்பதை தான் இங்கு சொல்கிறேன். எப்படி ஒரு விசயத்தை மற்றவர்களிடம் சொல்வதில் இருந்து எப்படி மற்றவர்கள் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுறாங்க என்பது வரைக்கும் ஏகப்பட்ட வரைமுறைகளை நம்மலே வகுத்து கொள்ளலாம்
இடம், நேரம், சூழ்நிலை மற்றும் மற்றவர்களின் மனநிலை என ஏக காரண்ங்கள் இருந்தாலும் அந்த விஜயம் மற்றவர்கலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பொறுத்தே அந்த விசயம் மற்றாவர்களை சேரும். இதையும் விட முக்கியமான ஒன்று தான் சொல்பவரின் உறுதிதன்மை பொருத்தது. இந்த காரணத்தாலயே ஒரு விசயம் எந்த அளவுக்கு மற்றவர்களிடம் போய் சேருகிறது. அது மட்டும் இல்லை அதை எந்த அளவுக்கு உள்வாங்கி கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறார்கள் என்பதையும் இது நிர்ணயம் செய்கிறது. முதல் முதலில் பார்க்க வேண்டிய விசயம் என்னவென்றால் ஒரு விசயம் எந்த அளவுக்கு மற்றவர்களுக்கு நன்மையும் தீமையும் கொடுக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி ஒன்ற்றும் இல்லை என்றால் சொல்லாமலே இருந்து விடலாம்.
இப்ப நம்ம கவனிக்க வேண்டிய விசயம் இரண்டுக்கு மேல போனால்...அதாவது ஒரு விசயம் இரண்டாவது மனிதர் மூலம் மூன்றாவது மனிதர்க்கோ இல்லை ஒரு பிரிவு மக்களுக்கோ போய் சேர வேண்டுமானால் இதை தான் செய்ய வேண்டும். மூன்றாவது மனிதற்க்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு விசயம் இரண்டாவது மனிதர்க்கும் முக்கியமாக இருக்க வேண்டும். அதாவது நன்மையா இல்லை தீமையா இருக்கவேண்டும். அதாவது அந்த விசயத்தால அந்த இரண்டாவது மனிதனுக்கு பாதிப்பு இருக்க வேண்டும். இரண்டாவது மனிதர் அந்த ஒரு விசயத்தின் தன்மையை பற்றி உணர வேண்டும், அதன் தேவையை உணர வேண்டும். மூன்றாவது மனிதனை சரியாக அடைய வில்லை என்றால் இரண்டாவது மனிதற்கு பாதிப்பு இருக்க வேண்டும். ...


Wednesday, June 20, 2007

காலத்தின் கட்டாயம்

காலத்தின் கட்டாயம்
கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்க்கும் போது சந்தோசத்தை விட வருத்தமே மிஞுகிறது. மனதால் எடுக்க படாத முடிவும், சிந்தித்து தானெ எடுக்காத முடிவும் நினைத்த படி வாழ்க்கையில் சந்தோசத்தை கொடுப்பதில்லை. காலத்தின் கட்டாயமும் , சூழ்நிலையும் கருத்தில் கொண்டு எடுக்க படுகின்ற முடிவு சரியான முடிவாக இருந்தாலும், நிலையானதாக இருந்தாலும், நினைத படி சந்தொசமாக இருக்கும் என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

வருத்தபடுவதும் சந்தோச படுவதும் மனதின் இயல்பாக இருந்தாலும், மனசு பக்குவபடுவது கடந்த கசப்பான நிகழ்சிகளினாலே. அதில் எந்த மாற்றமும் இல்லை.

Monday, April 16, 2007

நிலையாய் இருந்து விடு

நிலையாய் இருந்து விடு

மனமே ஒரு குரங்கு என்று சொல்வது உண்டு.. குரங்கு ஒரே இடத்தில் இருப்பதில்லை. இடத்துக்கு இடம் மரத்துக்கு மரம் தாவும். இந்த மனமும் அப்படி தானா? உண்மையாக தான் இருந்தாலும்...அதை விட ஒரு படி மேலே போய் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம், அண்டம் விட்டு அண்டம் இப்படி அல்லவா தாவுகிறது. உறவுகளை நினைத்து, நண்பர்களை நினைத்து, கடவுலை நினைத்து, காதலை நினைது, குடும்பத்தை நினைத்து, காலையில் நடந்ததை நினைது, மதியம் நடந்தை நினைத்து.. நேற்று நடந்தவையை நினைத்து...இன்னும் பல...இத்தனையும் ஒரு சில நொடிகளில்... நினைத்து முடித்து விடுகிறது இந்த மனசு. சூரியனின் ஒளியைய்யை விட, மின்னலின் ஒளியய்யை விட, எந்த சத்ததையும் விட மிக மிக அதிகமாக பயணிக்கிறது.. எங்கவும், எப்பவும் இதனால் ஊடுறவ முடிகிறது.

அலை பாயும் இந்த மனசு எப்போது நிலையாய் நிலைக்கும். ஓடி கொண்டே இருக்கிறது இந்த மனசு இந்த பூமியை போலே... தூக்கத்திலும் தன்னை அறியாம மனசு அலை பாய்கிறது... சில சமயம் இது கனவாக தெரிகிறது. நினைவு படுத்தி கொள்ள முடிகிறது. இதுவரையுலும்... இந்த மனசு... 5 நிமிடமாவது எதையும் நினைக்காத இருந்து இருக்கிறதா? இந்த பூமி கூட ஒரு பக்கம் இருட்டாகவும், மறுபக்கம் வளிச்சமாகவும் இருகிறது. இந்த மனசும் செயல்களுக்குள்ளே இருட்டாகவும், செயல்களுக்கு வெளியே வெளிச்சமாகவும் உள்ளது.

தன் மூச்சை கூட ஒரு சில நிமிடங்கள் நிறுத்தி விடலாம். ஆனால் இந்த மனசை மட்டும் ஒரு இடத்தில் நிறுத்தி விட முடியாது. மனதை கட்டு படுத்துவபவனே இந்த மகா உலகத்தை கண்ணால் காண முடியும்.

மனசே உறங்கி விடு...நீ தூங்கி விடு. நிம்மதியாய்... :will continue

Sunday, March 25, 2007

பாலாய் போன மனசே

மனசே, எனக்கு என்னை எப்போது முழுசாக நான் யாருன்று உணர்த்த போகிறாய். விவரம் தெரிந்த நாளில் இருந்து என்றைக்காவது நிம்மதியாக, அமைதியாக குழப்பம் இல்லாமல் மனம் இருந்தது உண்டா? என்றாவது இந்த பிறவி போதும் என்று, நினைத்தது உண்டா, இந்த பாலாய் போன மனசு!! read more tamil blogs @ manase relax please