Tuesday, July 31, 2007

இரண்டுக்கு மேலே போனால்


ஏதோ இரண்டு குழந்தைக்கு மேலே போனால் -குடும்ப கட்டுபாடு என்ற மாதிரி தொடங்குதுனு என நினைக்கிறிங்களா?. ஒரு விசயம் இரண்டு பேருக்கு மேலே போனால் என்ன ஆகும் என்பதை தான் இங்கு சொல்கிறேன். எப்படி ஒரு விசயத்தை மற்றவர்களிடம் சொல்வதில் இருந்து எப்படி மற்றவர்கள் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுறாங்க என்பது வரைக்கும் ஏகப்பட்ட வரைமுறைகளை நம்மலே வகுத்து கொள்ளலாம்
இடம், நேரம், சூழ்நிலை மற்றும் மற்றவர்களின் மனநிலை என ஏக காரண்ங்கள் இருந்தாலும் அந்த விஜயம் மற்றவர்கலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பொறுத்தே அந்த விசயம் மற்றாவர்களை சேரும். இதையும் விட முக்கியமான ஒன்று தான் சொல்பவரின் உறுதிதன்மை பொருத்தது. இந்த காரணத்தாலயே ஒரு விசயம் எந்த அளவுக்கு மற்றவர்களிடம் போய் சேருகிறது. அது மட்டும் இல்லை அதை எந்த அளவுக்கு உள்வாங்கி கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறார்கள் என்பதையும் இது நிர்ணயம் செய்கிறது. முதல் முதலில் பார்க்க வேண்டிய விசயம் என்னவென்றால் ஒரு விசயம் எந்த அளவுக்கு மற்றவர்களுக்கு நன்மையும் தீமையும் கொடுக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி ஒன்ற்றும் இல்லை என்றால் சொல்லாமலே இருந்து விடலாம்.
இப்ப நம்ம கவனிக்க வேண்டிய விசயம் இரண்டுக்கு மேல போனால்...அதாவது ஒரு விசயம் இரண்டாவது மனிதர் மூலம் மூன்றாவது மனிதர்க்கோ இல்லை ஒரு பிரிவு மக்களுக்கோ போய் சேர வேண்டுமானால் இதை தான் செய்ய வேண்டும். மூன்றாவது மனிதற்க்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு விசயம் இரண்டாவது மனிதர்க்கும் முக்கியமாக இருக்க வேண்டும். அதாவது நன்மையா இல்லை தீமையா இருக்கவேண்டும். அதாவது அந்த விசயத்தால அந்த இரண்டாவது மனிதனுக்கு பாதிப்பு இருக்க வேண்டும். இரண்டாவது மனிதர் அந்த ஒரு விசயத்தின் தன்மையை பற்றி உணர வேண்டும், அதன் தேவையை உணர வேண்டும். மூன்றாவது மனிதனை சரியாக அடைய வில்லை என்றால் இரண்டாவது மனிதற்கு பாதிப்பு இருக்க வேண்டும். ...