Monday, April 16, 2007

நிலையாய் இருந்து விடு

நிலையாய் இருந்து விடு

மனமே ஒரு குரங்கு என்று சொல்வது உண்டு.. குரங்கு ஒரே இடத்தில் இருப்பதில்லை. இடத்துக்கு இடம் மரத்துக்கு மரம் தாவும். இந்த மனமும் அப்படி தானா? உண்மையாக தான் இருந்தாலும்...அதை விட ஒரு படி மேலே போய் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம், அண்டம் விட்டு அண்டம் இப்படி அல்லவா தாவுகிறது. உறவுகளை நினைத்து, நண்பர்களை நினைத்து, கடவுலை நினைத்து, காதலை நினைது, குடும்பத்தை நினைத்து, காலையில் நடந்ததை நினைது, மதியம் நடந்தை நினைத்து.. நேற்று நடந்தவையை நினைத்து...இன்னும் பல...இத்தனையும் ஒரு சில நொடிகளில்... நினைத்து முடித்து விடுகிறது இந்த மனசு. சூரியனின் ஒளியைய்யை விட, மின்னலின் ஒளியய்யை விட, எந்த சத்ததையும் விட மிக மிக அதிகமாக பயணிக்கிறது.. எங்கவும், எப்பவும் இதனால் ஊடுறவ முடிகிறது.

அலை பாயும் இந்த மனசு எப்போது நிலையாய் நிலைக்கும். ஓடி கொண்டே இருக்கிறது இந்த மனசு இந்த பூமியை போலே... தூக்கத்திலும் தன்னை அறியாம மனசு அலை பாய்கிறது... சில சமயம் இது கனவாக தெரிகிறது. நினைவு படுத்தி கொள்ள முடிகிறது. இதுவரையுலும்... இந்த மனசு... 5 நிமிடமாவது எதையும் நினைக்காத இருந்து இருக்கிறதா? இந்த பூமி கூட ஒரு பக்கம் இருட்டாகவும், மறுபக்கம் வளிச்சமாகவும் இருகிறது. இந்த மனசும் செயல்களுக்குள்ளே இருட்டாகவும், செயல்களுக்கு வெளியே வெளிச்சமாகவும் உள்ளது.

தன் மூச்சை கூட ஒரு சில நிமிடங்கள் நிறுத்தி விடலாம். ஆனால் இந்த மனசை மட்டும் ஒரு இடத்தில் நிறுத்தி விட முடியாது. மனதை கட்டு படுத்துவபவனே இந்த மகா உலகத்தை கண்ணால் காண முடியும்.

மனசே உறங்கி விடு...நீ தூங்கி விடு. நிம்மதியாய்... :will continue